Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும்'. மீனவர்கள் ஆவேசம்

சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும்'. மீனவர்கள் ஆவேசம்
, வியாழன், 9 மார்ச் 2017 (04:44 IST)
கடந்த சில மாதங்களாகவே தமிழகர்களுக்கு எதிரான கருத்துக்களையும், தமிழர்களை பொறுக்கி என்றும் விமர்சனம் செய்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு தொடர்ந்து தமிழர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 


இந்நிலையில் சமீபத்தில் இலங்கை கடற்படையினர்களால் பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் 'தமிழகத்தின் பொறுக்கிகள் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படை உடன் சண்டையிடுங்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் சுவாமியை அடக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதற்கும் தமிழர்கள் கண்டனம தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மீனவர் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:

தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே சுப்பிரணிமணியன் சுவாமி தான் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 140 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 800க்கும் அதிகமான மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

தற்போது மீனவர் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்ததை தொடர்ந்து இரண்டு நாட்களாக மீனவர்கள் பல போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை முடக்கிய குற்றத்திற்காகவும், தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும்'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டதற்கு மோடிதான் காரணம். எஸ்பிஐ வங்கி தலைவர் அதிரடி