சுனாமி போல உள்புகுந்த கடல்நீர்! திடீரென வெள்ளத்தில் மூழ்கிய எர்ணாக்குளம்! - அதிர்ச்சி வீடியோ!

Prasanth K
புதன், 18 ஜூன் 2025 (11:22 IST)

கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் திடீரென கடல்நீர் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கடலோர மாவட்டமான எர்ணாக்குளம் பகுதியில் திடீரென கடல் ஆர்ப்பரித்து அருகே இருந்த கிராமங்களை சூழ்ந்தது.

 

திடீரெனா கடல் நீர் உள் புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அப்பகுதிகளை விட்டு வேகமாக வெளியேறினர். சிலர் உயரமான பகுதிகளில் ஏறிக் கொண்டனர். சுனாமி வந்துவிட்டதை போல கடல் நீர் சூழ்ந்ததால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடல்நீர் உள்ளே புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments