Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேள்விக்குட்படுத்தப்படுகிறதா சந்திரயான் 2 தொழில்நுட்பம்??

கேள்விக்குட்படுத்தப்படுகிறதா சந்திரயான் 2 தொழில்நுட்பம்??

Arun Prasath

, திங்கள், 23 செப்டம்பர் 2019 (12:11 IST)
சந்திரயான் 2 திட்டம் 98% வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ சிவன் தெரிவித்திருந்த நிலையில், சந்திரயான் 2 வின் தொழில்நுட்பம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்து வந்த நிலையில், அந்த முயற்சி பலனிக்கவில்லை. நிலவில் இரவு காலம் ஆரம்பித்ததால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்ற நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 திட்டம் 98 % வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூத்த விஞ்ஞானிகள் இஸ்ரோ சிவனிடம் நிறைய கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இஸ்ரோ தலைவருக்கான ஆலோசகர் தபன் மிஸ்ரா தன்னுடைய டிவிட்டர் பதிவில், ”திடீரென விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தும் போது, அதிகரிக்கும் பணிச்சுமைகளால், தொடர்ச்சியான சந்திப்புகளால், அனல் பறக்கும் விவாதங்கள் போன்றவற்றால் ஒரு நிறுவனத்தில் அரிதாகத்தான் தலைமை உருவாகும், புதுமைகளுக்கு தடை விதித்துவிட்டு நிறுவனம் வளர்ச்சி அடைய முடிவதில்லை, இறுதியில் வரலாற்றில் வெறும் அடிக்குறிப்புகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்” என இஸ்ரோ சிவனை விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்ற பிறகு அகமதாப்பாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் பதவியில் இருந்து வெளியேறியவர் தபன் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றொரு மூத்த விஞ்ஞானி கூறுகையில்” விக்ரம் லேண்டரில் 5 தர்ஸ்டர்களுக்கு (இஞ்சின்கள்) பதிலாக ஒரே ஒரு தர்ஸ்டரை இஸ்ரோ பயன்படுத்தியிருக்க வேண்டும். அது தான் கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்” எனவும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனைக் கொன்று பெட்டிக்குள் போட்டு பூட்டிய மனைவி – நாற்றம் அடித்ததால் எடுத்த முடிவு !