Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லேண்டர் விக்ரம் ஏன் தொடர்பை இழந்தது? அடுத்த கட்டத்திற்கு நகரும் இஸ்ரோ!

Advertiesment
லேண்டர் விக்ரம் ஏன் தொடர்பை இழந்தது? அடுத்த கட்டத்திற்கு நகரும் இஸ்ரோ!
, சனி, 21 செப்டம்பர் 2019 (09:28 IST)
விக்ரம் லேண்டர் தனது ஆயுட்காலத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், இஸ்ரோ விக்ரம் ஏன் தொடர்ப்பை இழந்தது என ஆராய்ந்து வருகிறதாம். 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்தரயான் 2, கடந்த 7 ஆம் தேதி நிலவின் மேற்பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்த போது நிலவின் 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. 
 
இதன் பின்னர் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் எந்த சேதமும் இல்லாமல் நிலவின் மேற்பகுதியில் சாய்ந்து கிடக்கிறது என கண்டறிந்தனர். பின்பு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்தனர். 
 
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாள் மட்டுமே என்பதால் இஸ்ரோ நாசாவின் உதவிஐ நாடியும் விகரமுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், எந்த முயற்சிகளும் பல கொடுக்கவில்லை. 
webdunia
நிலவில் 14 நாள் பகல் காலமும், 14 நாள் இரவு காலமுமாக இருக்கும். நிலவு காலம் வந்துவிட்டால் குளிர் நிலவும். ஆதலால் லேண்டரின் மின்னணு பாகங்கள் செயலிலந்துவிடும். எனவே விக்ரம் லேண்டரின் 14 நாட்கள் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில் தொடர்ப்பு ஏற்படுத்த முடியதாக காரணத்தால் அடுத்து என்ன என அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ நகர்ந்துள்ளது. 
 
ஆம், இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். இந்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலையில், ஆர்ப்பிட்டர் சிறப்பாக செயல்பாட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இளம்பெண் மர்ம மரணம் – அம்பத்தூர் தொழில் பூங்காவில் பரபரப்பு !