பள்ளியில் பாம்பு கடித்து சிறுமி மரணம் – ஆசிரியர் சஸ்பெண்ட்

வெள்ளி, 22 நவம்பர் 2019 (09:08 IST)
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுமி வகுப்பறையில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு, சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பவரின் மகள் ‌ஷகாலா, சாஜவான் வொக்‌ஷனல் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை 3.30 மணியளவில் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே உள்ள வலைப் போன்ற குழி ஒன்று இருந்துள்ளது.

அதில் இருந்து வந்த பாம்புதான் அவளைக் கடித்திருக்கும். இதுகுறித்து மாணவர்கள் வகுப்பாசியரிடம் சொல்லியுள்ளனர். அந்த ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் பெற்றோருக்கு தகவல் சொல்லி அவர்கள் வரும் வரை காத்திருக்க வைத்துள்ளார்.

ஷகாலாவின் பெற்றோர் வர அரைமணி நேரம் ஆக அதன் பிறகு சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் சென்றுள்ளனர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிறுமியை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைக்க பாதி வழியிலேயே மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து நட்வடிக்கை எடுக்காத ஆசிரியரை  சஸ்பெண்ட் செய்துள்ளது நிர்வாகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறலாம்..