சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் முதல் நாளிலேயே 3 கோடிக்கும் மேல் காணிக்கை வசூல் சேர்ந்துள்ளது.
	
	
	கடந்த 16 ஆம் தேதி, மகரவிளக்கு பூஜை, மண்டல் பூஜைகளுக்காக சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் ஐயப்பனை தரிசிக்க சுமார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதனை தொடர்ந்து நடை திறந்த முதல் நாளிலேயே காணிக்கை மூலம் 3.32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு 10 முதல் 50 வயதுக்குள்ளான பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சபரிமலை பக்தர்கள் மிகவும் கொந்தளித்தனர். எனினும் இந்த வருடம் சபரிமலை பக்தர்க்ள் மிகவும் உற்சாகத்துடனே தரிசிக்க வருவதாக தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.