விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறலாம்..

Arun Prasath

வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:52 IST)
மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவித்துள்ளது.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது மக்கள் இம்மூவரையும் தேர்ந்தெடுக்கமுடியாது. வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கமுடியும்.

இந்த அறிவிப்பை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக அதிமுக, தனது கட்சியில் மேயர், நகராட்சி, பேரூராட்சி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெறலாம் என அறிவித்தது.

அதிமுகவை தொடர்ந்து தற்போது திமுகவும் அம்மூன்று பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தென்காசி ”பட்டணம்” இல்ல.. இனி மாவட்டம்!!