கணவர் அல்லாத மற்ற ஆண்களுடன் உறவு கொள்வது கிரிமினல் குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமீப காலமாக, இந்தியாவில் உள்ள சிக்கலான பிரச்சனைகளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வருகிறது. சமீபத்தில் கூட இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பலத்த வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த சட்டப்படி, கணவர் அல்லாத வேறு ஒரு வேறு ஒருவருடன் ஒரு பெண் கள்ள உறவு கொண்டால், அதில் ஆண் மட்டுமே தண்டனை பெறும் நிலை உள்ளது.
இந்த பிரிவின் கிழ் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு குற்றத்தின் கீழ் தண்டனை பெற்று வருகின்றனர். இந்த குற்றத்திற்கு 5 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டப்பிரிவின் கீழ் ஆண் மட்டுமே எப்படி தண்டிக்கப்படலாம். இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது. எனவே, இந்த சட்டத்தையே நீக்க வேண்டும் என சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல், கள்ள உறவில், ஒரு பெண்ணின் சம்மதத்துடனேயே தவறு நடக்கிறது. எனவே, பெண்ணையும் சேர்த்தே தண்டிக்க வேண்டும் என சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் “பெண்கள் ஆண்களின் சொத்து அல்ல. ஆண்களைப் போலவே பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் ஆணுக்கு மட்டுமே தண்டனை அளிக்கப்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
ஒரு பெண் கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உறவு கொள்வது மட்டுமே கிரிமினல் குற்றம் ஆகாது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் இது குற்றம் அல்ல. பிடிக்கவில்லையெனில் விவாகரத்து பெறாலம். ஆனால், மனைவிகளை தங்கள் சொத்துக்கள் போல் ஆண்கள் கருதக்கூடாது” எனக் கூறிய நீதிபதி, தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை விதிக்கும் சட்டம் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.