சென்னை வந்துள்ள ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்தப் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் ஆதார் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
ஆதார் குறித்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ‘ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் ஆதார் அட்டை இல்லை என்பதற்காக தனிமனிதர்கள் அரசிடம் இருந்து பெறும் சலுகைகளை மறுக்கக் கூடாது. சிம் கார்டு வாங்க மற்றும் வங்கிக் கணக்கு திறக்க போன்ற அத்தியாவசியமானவைகளுக்கு ஆதார் அவசியமில்லை’ எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக்குடனான சந்திப்புக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ’ஆதாரால் தனி மனிதனின் சுதந்திரம் பாதிக்க்ப்படக் கூடாது என்றும், அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப்பார்ப்பது தவறு’ எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.