Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் மட்டும் காங்கிரஸ் தலைவராக இருந்திருந்தால்.. சசிதரூர் பரபரப்பு பேட்டி..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (10:30 IST)
நான் மட்டும் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் ஒரு சிறிய மாநில கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்திருப்பேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிதரூர் தெரிவித்துள்ளார். 
 
நாடு தற்போது பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இந்த வாய்ப்பை நழுவ விட்டால் பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடித்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
நான் மட்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவித்திருப்பேன் என்று தெரிவித்தார். 
 
நாடு முழுவதும் இருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ் தான் என்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி , சமாஜ்வாடி கட்சி, மார்க்கிஸ்ட்  கட்சி ஆகியவை தற்போது ராகுல் காந்தி பிரச்சனையின் காரணமாக ஒன்று சேர்ந்துள்ளது என்றும் ஒற்றுமையாக இருந்தால் நாம் அனைவரும் ஒன்றாக பாஜகவை வீழ்த்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இன்றைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments