சாவர்க்கரை எதிர்ப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்! – சர்ச்சையில் சஞ்சய் ராவத்!

சனி, 18 ஜனவரி 2020 (16:38 IST)
சாவர்க்கருக்கு விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீர சாவர்க்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என சிவசேனா கூறி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. ஆனால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தொடர்ந்து சிவசேனாவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் “காந்தி, நேரு போல வீர சாவர்க்கரும் நாட்டின் விடுதலைக்காக கடுமையாக உழைத்தவர். பல இன்னல்களை அனுபவித்தவர். ஆனால் பலர் அவருக்கு பாரத ரத்னா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை இரண்டு நாட்களாவது அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் சாவர்க்கர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவர்களுக்கு புரியும்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் மக்களவை அமளியில் ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொன்னதற்கு நான் ராகுல் சாவர்க்கர் அல்ல என அவர் பேசியது சிவசேனாவினர் இடையே எதிர்ப்பை கிளப்பிய நிலையில் சஞ்சய் ராவத் இவ்வாறாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காஷ்மீரில் மீண்டும் செல்ஃபோன் சேவை தொடக்கம்..