நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு
கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் சிங், முகேஷ் சிங், அக்ஷய் குமார் சிங், பவன்குப்தா, வினய் ஷர்மா ஆகியோருடன் 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான்
இதில் சிறுவனுக்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு பேரின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டன.
இதன்பிறகு 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அளித்தார். அம்மனுவை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார் அதன் பின்பு அம்மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பபப்பட்டது. இந்நிலையில் குடியரசு தலைவர் நிராகரித்ததால் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.