இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
நேற்று இந்தூரில் கோவில் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியபோது சனாதனத்தை அவமதித்து இந்தியாவில் சிலர் பேசி வருவது துரதிஷ்டமானது என்றும் நாட்டின் தேசிய மதமாக உள்ள சனாதன தர்மத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சனாதன தர்மம் இந்தியர்களின் கலாச்சார அடையாளமாக உள்ளது என்றும் இந்தியா பாகிஸ்தான் வங்கதேசத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செய்வோர்களை அங்கு இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதிலிருந்து இந்த விஷயம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது