Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு! – I.N.D.I.A கூட்டணி அதிரடி முடிவு!

குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு! – I.N.D.I.A கூட்டணி அதிரடி முடிவு!
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (11:30 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியை தக்க வைக்க வியூகங்களை வகுத்து வருகிறது.

பாஜகவை இந்த முறை வீழ்த்தியே ஆவது என காங்கிரஸ் மற்றும் பல மாநில கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சில மீடியாக்கள் அந்த செய்தியை ஒளிபரப்பவில்லை என்றும், சில மீடியாக்கள் பாஜக ஆதரவு மனநிலையில் செயல்படுவதாகவும், அதன் விவாதங்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மீடியாவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் யாரும் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்துக்கு பாஜக பாராட்டு.. என்ன காரணம்?