கேரளா வெள்ளம்: கோடிகளை கொட்டி குவிக்கும் ஹோண்டா, சாம்சங் நிறுவனங்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (07:23 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து அம்மாநில மக்களுக்கு உதவி செய்ய பல்வேறு நிறுவனங்கள், மாநில அரசுகள், மத்திய அரசு, வெளிநாட்டு தனிநபர்கள், திரையுலகினர் என கோடிக்கணக்கில் நிதியுதவிகள் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவில் தொழில் செய்து வரும் வெளிநாட்டு நிறுவனங்களான ஹோண்டா, சாம்சங் உள்பட பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் ரூ.3 கோடி நிதியுதவி செய்துள்ளது. அதேபோல், சாம்சங் நிறுவனம் ரூ.1.5 கோடியும் கேரளாவுக்கு நிதியுதவி செய்துள்ளது மட்டுமின்றி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு ஆயிரம் படுக்கைகள் மற்றும் போர்வைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.
 
அதேபோல் கேரளாவிற்கு அதானி அறக்கட்டளை சார்பாக ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள அதானி அறக்கட்டளை நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்! ஓபிஎஸ் ஆவேசம்