துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்! ஓபிஎஸ் ஆவேசம்

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:59 IST)
கட்சியின் நலனுக்காக துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆவேசமாக பேசியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
பெரும் பரபரப்புக்கு இடையே இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், 'மூத்த அமைச்சர்கள், பதவியை துறந்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட தயாராக வேண்டும் என்றும் இதற்கு முன்னுதாரணமாக கட்சியின் வளர்ச்சிக்காக துணை முதலமைச்சர் பதவியையும் துறக்கத் தயார் என்றும் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஏற்கனவே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் அவர்களின் ராஜினாமா குறித்த இந்த அறிவிப்புக்கு கட்சியின் நலன் மட்டுமே காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை: எய்ம்ஸ் மருத்துவர்கள்