Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் 7 நாட்களில்......பெங்களூருக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

இன்னும் 7 நாட்களில்......பெங்களூருக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை
, வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:56 IST)
கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் போல் பெங்களூரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 
கேரள மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த பகுதியில் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது.
 
இந்நிலையில் பெங்களூர் பகுதியில் பெரிய அளிவில் வெள்ளம் ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்த மாற்றம் பெங்களூரில் திடீர் மழைக்கு வழிவகுக்கும். 
 
இதனால் வெள்ளம் ஏற்படும். இந்த வருடம் பெங்களூரில் வெள்ளம் ஏற்பட 90% கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முழுவதும் பெங்களூர் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணம் சாலை ஓரங்களில் தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கி நிற்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் கனமழை பெய்தால் கண்டிப்பாக எல்லா பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான்.
 
பேரிடர் மேலாண்மை ஆணையத்தையின் எச்சரிக்கையின் படி மாநில அரசுகள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியெல்லாம் சித்தரவதை செய்வதா? இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்