ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய போவதாக கடந்த சில நாட்களாக செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் அவர் பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து மீண்டும் அவர் முதல்வரான நிலையில் சம்பாய் சோரன் பதவி விலகினார்.
அதன் பிறகு சில அதிருப்தி காரணமாக பாஜகவில் சம்பாய் சோரன் இணைய போவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதனால் ஜார்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது