Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இடுவதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது: மத்திய அரசு

Dharmendra Pradhan,

Mahendran

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (18:40 IST)
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தான் பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி தமிழக அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதாக உறுதி அளித்திருந்தது என்றும் ஒப்புக்கொண்டபடி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து இடவேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழகத்திற்கு சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தரவேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளி என்னும் திட்டத்தில் தமிழகம் சேர மத்திய அரசு கோரிக்கை வைத்தது என்றும் இந்த திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் விலக்கு உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது என்றும் அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டதால் தமிழகம் சேராமல் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.
 
இந்த கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து இடுவதாக இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தமிழக அரசு உறுதி அளித்தது என்றும் அதன்படி பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க.. முதல்வர் அமெரிக்க பயணம் குறித்து பாஜக..