கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க' என்ற வரிகளும், 'முகமது பின் துக்ளக்' நாடகத்தில் 'சோ' அவர்கள் நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா? என்று காட்சியும் தான் நினைவில் வருகிறது என முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்த நிறுவனங்கள் அனைத்துமே தற்போது தமிழகத்தில் இயங்கி வருகிற நிலையில், இதற்காக எதற்கு அமெரிக்கா சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வியப்பாக இருக்கிறது.
முதலீடுகளை ஈர்க்க போவதாக சொல்லிவிட்டு அங்கு இறங்கிய மறுநாளே முதலீடுகள் குவிந்தன என்று செய்தி வெளியிடுவது 'மக்கள் முட்டாள்கள்' என்ற எண்ணத்தை 'திராவிட மாடல்' கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஒரு நிறுவனம் தன் தொழிலை கட்டமைக்க பல கோடிகள் செலவு செய்த இடத்தில் தான், அதை விரிவாக்கம் செய்யவும் முயற்சிக்கும் என்பது சாதாரண பொது அறிவு. ஆனால், அந்த பொது அறிவு தமிழர்களிடத்தில் இல்லை என்று திராவிட மாடல் நினைப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏதோ திரைப்படங்களில் காட்டக்கூடிய பிரம்மாண்டத்தை, கவர்ச்சியை காண்பித்தால் தமிழர்கள் மயங்கி விடுவார்கள் என்று திராவிட மாடல் எண்ணுவது நகைச்சுவை. இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.