Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:57 IST)
ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது  நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நவம்பர் மாதம் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் ஆன்லைனில் அனுமதி பெறாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே வரும் நவம்பர் மாதம் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.  சபரிமலை தேவஸ்தானத்தின் இந்த புதிய அறிவிப்பால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.5.25 கோடி அபராதம்.. என்ன காரணம்?