ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாகவே ஆன்லைன் கேம், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் கேம்ஸ் விளையாடி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அந்த விளையாட்டிற்கு அடிமையான அவரால் அதிலிருந்து மீளமுடியவில்லை என தெரிகிறது.
இந்த ஆன்லைன் கேமினால் மனநலம் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விளையாட்டு மோகத்தில் கை, கால்கள் நிலையாக இல்லாததால் அவை கட்டப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.