ஆன்லைன் பணம் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி 5.25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு இணங்கவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு, ரிசர்வ் வங்கி ரூ.5.39 கோடி அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கேஒய்சி மற்றும் பண மோசடி எதிர்ப்பு ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு ஆய்வு நடத்திய நிலையில், பேடிஎம் அதை கடைபிடிக்காததால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.