திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நாடு முழுவதும் நடத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தாமதிக்காமல் உடனே ப்டபிடிப்புகளை துவங்க மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகளை பின்வற்ற வேண்டும். அவை,
1. படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
2. 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
3. குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்
4. படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது
5. மைக் போன்ற பொருட்களை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.
6. உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்து அளவிற்கு தவிர்க்க வேண்டும்.
7. கேமரா முன் நிற்கும்போது தவிர மற்ற நேரங்களில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்
8. உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்
9. ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும்.
10. வெளிப்புற படப்பிடிப்பின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்