Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி பட்டாசுக்கு தடை: எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

Advertiesment
டெல்லி பட்டாசுக்கு தடை: எவ்வளவு நஷ்டம் தெரியுமா?
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (13:31 IST)
5வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது.


இந்தியாவில் பல நகரங்களில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டெல்லி மாறி வருகிறது.

இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய், டெல்லியில் இந்த முறை ஆன்லைன் மற்றும் நேரடி பட்டாசு விற்பனைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்கவும், வெடிக்கவும் ஜனவரி 1, 2023 வரை தடை விதிக்கப்படுகிறது. இதை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ் மற்றும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் குழு செயல் திட்டம் வகுக்கப்படும். டெல்லியை மாசு அபாயத்திலிருந்து காப்பாற்ற அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தது.

இந்தநிலையில் 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியிலிருந்து அனுப்பப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க கூடாது: சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் தடை