ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க கூடாது என சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலிலும், மற்ற யூ டியுப் சேனலிலும் பேட்டி அளிக்கும் போது ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்
இந்த நிறுவனம் முதல்வரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் நிறுவனம் என்றும் இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்து வருவதாகவும் கூறி வந்தார்
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்த உத்தரவு ஒன்றில் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.