காரை உரசி சென்ற பைக்.. ஆத்திரத்தில் பைக் ஓட்டுனரை காரை ஏற்றி கொலை செய்த தம்பதி..!

Mahendran
வியாழன், 30 அக்டோபர் 2025 (09:55 IST)
பெங்களூரு புட்டெனஹள்ளி பகுதியில், ஒரு சிறிய சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தால் இளைஞர் ஒருவரை தம்பதி துரத்தி சென்று காரால் மோதி கொன்றனர்.
 
மனோஜ் குமார் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சர்மா ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தபோது, தர்ஷன் மற்றும் வருண் சென்ற இருசக்கர வாகனம் காரின் கண்ணாடியில் லேசாக உரசியது. இதனால் ஆத்திரமடைந்த தம்பதி, இருசக்கர வாகனத்தை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று, வேண்டுமென்றே காரால் மோதினர். இந்த தாக்குதலில் தர்ஷன் உயிரிழந்தார்.
 
விபத்துக்கு பின் தப்பி சென்ற தம்பதி, பின்னர் முகமூடி அணிந்து திரும்பி வந்து, விபத்துக்கான தடயங்களை அகற்ற முயன்றுள்ளனர். மேலும், அவர்கள் இளைஞர்களை இருமுறை மோதி தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
 
முதலில் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மனோஜ் குமார் மற்றும் ஆர்த்தி சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments