Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் ’’மனரீதியாக’’ துன்படுத்தியதாக தகவல்

Advertiesment
அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் ’’மனரீதியாக’’  துன்படுத்தியதாக தகவல்
, சனி, 2 மார்ச் 2019 (18:47 IST)
பாகிஸ்தானில் இருந்து நேற்றிரவு சுமார் 9 மணிக்கு தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு நாடே சிறப்பான வரவேற்பு கொடுத்தது. குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களும் அபிநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முன்பு ஆஜாரான அபிநந்தன் அவரிடம் பாகிஸ்தானில் நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் வசம் இருந்தபோது என்ன நடந்தது என்றும், பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் தளபதியிடம் அபிநந்தன் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
 
இதனையடுத்து டெல்லி மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இதற்காக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். நிர்மலா சீதாரமன், அபிநந்தன் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
 
இந்நிலையில் தற்போது டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அபிநந்தனிடம் மருத்துவர்கள் தீவிரமாக விசாரித்த போது, பாகிஸ்தான் வசன் தான் இருந்த போது உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை.ஆனால் மன ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த தகவலை ஏ.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்வு எழுதிய போது மாரடைப்பு: 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!