சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குறைக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இது கொண்டாட்டமான செய்தியாகும்.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வங்கிகளில் வீடு, கார் உள்ளிட்டவை வாங்கியதற்காக கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் குறையும். இதனால் கடன் தொகையோ அல்லது கடனுக்கான தவணையோ குறையும்.
தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக உள்ளது. மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணவீக்கம் சாதகமாக இருப்பதால், மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் ரெப்போ விகிதத்தை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கும் என்றும், எனவே வட்டி விகிதம் 5.25% ஆகக் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் நிதிக் கொள்கைக் கூட்டம் கூட இருக்கும் நிலையில், அப்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வீடு வாங்க, கார், பைக் வாங்க கடன் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால், கடன் வாங்கியவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.