இந்திய ரிசர்வ் வங்கியில் தொடர்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மும்பையில் உள்ள RBI Services Board-க்கு அனுப்ப வேண்டும். அத்துடன், அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தின் மென் நகலை (soft copy) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14, மாலை 6 மணிக்குள் ஆகும்.
வயது வரம்பு: ஜூலை 1, 2025 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 50 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது கட்டாயம்.
அனுபவம்: பொதுத்துறை வங்கி அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் முன் அனுபவம் அவசியம்.
மாதாந்திர சம்பளம்: ரூ.1,64,800 முதல் ரூ.2,73,500 வரை
மேலும் விவரங்களுக்கு RBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவும்.