Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலவச டேட்டா போய், இலவச பெட்ரோல்: அம்பானியின் அசத்தல் அறிவிப்பு!!

இலவச டேட்டா போய், இலவச பெட்ரோல்: அம்பானியின் அசத்தல் அறிவிப்பு!!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (14:37 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தேசத்தின் பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு உதவும் வகையில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
மேலும், மை ஜியோ அப்ளிகேசனில் உள்ள Corona Symptoms Checker ஆப்ஷனையும் வழங்கியுள்ளது. இதுதோடு நிறுத்தாமல் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார நிவாரணங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
 
கொரோனா நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 
 
இந்தியாவிலேயே அதிகம் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ள  மகாராஷ்டிராவிற்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றும் மக்கள்: சிறை தண்டனை அறிவித்த முதல்வர்