ரூ.251 புதிய பிளான்…வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்க்கு...ஜியோ அதிரடி !!

திங்கள், 23 மார்ச் 2020 (18:38 IST)
ரூ.251 புதிய பிளான்…வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்க்கு...ஜியோ அதிரடி !!

உலகம் முழுவதும் 15,296 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதான முதியவர் உயிரிழந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான  கார்பரேட் நிறுவனங்கள்,  மற்றும் ஐடி நிறுவனங்கள் அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில்பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் படி நிறுவனம் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும்  வகையில், முகேஷ் அம்பானி  தலைமையிலான ரிலையன்ஸ் –ன் ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி ஒருநாளைக்கு, 2ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம் . குறிப்பிட்ட டேட்டா அளவு  64 கே.பி.பி. எஸ் எனும் இணைய வேகத்தில் கீழ்  தொடர்ந்து இண்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் பேக்கின் விலை ரூ.251 ஆகும். ஆனால் இந்த சலுகையில் எந்த விதமான குரல் அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ்களையும் பெற முடியாது என்பது ம் இது டேட்டா பேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காவலருக்கு கொரோனா: தமிழகத்தில் அதிகரிக்கும் பீதி!!