இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி, இனி மக்கள் தங்க நகைகளை போலவே வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை அடகு வைத்தும் வங்கிகளில் கடன் பெறலாம். இந்த நடைமுறை 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை மட்டுமே அடகு வைக்க முடியும். வெள்ளியின் மொத்த மதிப்பில் 75% வரை கடன் தொகையாகப் பெறலாம். ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 கிலோ வெள்ளி நகைகள் வரையிலும், வெள்ளி நாணயங்கள் என்றால் 50 கிராம் வரையிலும் மட்டுமே கடன் பெற முடியும். ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 85% வரையிலும், அதிக தொகைக்கு 75% வரையிலும் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருதல் மற்றும் அதன் தொழில் பயன்பாடு அதிகரித்துள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், வெள்ளியின் விலை ஏற்ற இறக்கம் காரணமாக, சந்தை மதிப்பு குறையும்போது வங்கிகள் கூடுதல் தொகையை கோர வாய்ப்புள்ளது.