Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் உரிமை தொகை ரூ.10,000.. சிலிண்டர் ரூ.500.. முதல்வர் வாக்குறுதி..!

மகளிர் உரிமை தொகை ரூ.10,000.. சிலிண்டர் ரூ.500.. முதல்வர் வாக்குறுதி..!
, புதன், 25 அக்டோபர் 2023 (17:07 IST)
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிரா லக்ஷ்மி உத்தரவாதம்" திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ஆண்டுக்கு ரூ.10,000 பண உதவி மற்றும் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர்கள் ரூ.500 விலையில் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
 
ஜெய்ப்பூரில் நடந்த பேரணியில் கெலாட் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் மற்றும் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டால், ராஜஸ்தானில் உள்ள  குடும்பங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 10,000 வருடாந்திர உதவி கிடைக்கும். அதேபோல். எல்பிஜி சிலிண்டர்களும் குறைந்த விலையில் கிடைக்கும். 
 
கிரஹ் லக்ஷ்மி உத்தரவாதத் திட்டம் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களின் குறைக்கப்பட்ட விலை ஆகிய இரண்டும் ராஜஸ்தானில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் முக்கிய நலத்திட்டங்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத்.. என்சிஇஆர்டி ஒப்புதல்