Publish Date: Sun, 15 Oct 2023 (10:20 IST)
Updated Date: Sun, 15 Oct 2023 (10:21 IST)
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ட்டின் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் நேற்று முன் தினம் அவரது அலுவலகம், வீடு மற்றும் , அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறாஇயினர் சோதனை செய்தனர்.
இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் இன்றும் சோதனை நடந்து வருகின்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Mahendran
Publish Date: Sun, 15 Oct 2023 (10:20 IST)
Updated Date: Sun, 15 Oct 2023 (10:21 IST)