Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

கொட்டித் தீர்த்த கனமழை: மிதக்கின்றது மும்பை!

Advertiesment
கொட்டித் தீர்த்த கனமழை: மிதக்கின்றது மும்பை!
, ஞாயிறு, 18 ஜூலை 2021 (11:26 IST)
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மும்பையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பையில் உள்ள மின்சார ரயில் தடங்களில் தண்ணீர் புகுந்துள்ளதை அடுத்து மின்சார ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் செம்பூர் என்ற பகுதியில் திடீரென குடியிருப்பு பகுதிகளில் சுவர் இடிந்ததை அடுத்து 15 பேர் பலியாகியுள்ளதாகவும் 16 பேர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மும்பையில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அடுத்து மும்பை மக்கள் சிரமத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை கோவிலில் இன்று முதல் 10 பக்தர்களுக்கு அனுமதி: கேரள அரசு அறிவிப்பு