நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்வுள்ளது. இதனால், பாஜகவை எதிர்க்க மெகா கட்சியை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உருவாக்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, பாஜகவும், பிரதமர் மோடியும் அரசியல் சாசனம் மற்றும் தேசிய நிறுவனங்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். எனவே பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது என்பது பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் விருப்பம் மட்டுமல்ல மக்களின் உணர்வும் அதுவே அதுவே.
எனவே, இத்தகைய குரல்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இது போன்றுதான் மஜகவுடன் கூட்டணி அமைத்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.