Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தி முன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி

Advertiesment
ராகுல் காந்தி முன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி
, புதன், 13 ஜூன் 2018 (08:23 IST)
பாரளுமன்ற தேர்தல் வரும் 2019ஆம் ஆண்டு வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்நோக்க திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகின்றன
 
இந்த நிலையில் இரு கட்சிகளுமே முக்கிய பிரமுகர்களை கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக தலைவர்கள் தங்களுடைய நான்கு ஆண்டு சாதனைகளை புத்தகமாக போட்டு இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கொடுத்து வந்து கொண்டிருக்கின்றது.
 
webdunia
இந்த நிலையில் ஓய்வு பெற்ற மும்பை ஐகோர்ட் நீதிபதி அபய் திப்சே என்பவர் நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இவர்தான் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த பெஸ்ட் பேக்கரி வெடிகுண்டு வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய வரவால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் பேருந்து கோர விபத்து - 17 பேர் பரிதாப பலி