Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 நொடிகளில் ராகுல் பயணித்த விமானம் நொறுங்கியிருக்கும்: அதிர்ச்சி அறிக்கை

20 நொடிகளில் ராகுல் பயணித்த விமானம் நொறுங்கியிருக்கும்: அதிர்ச்சி அறிக்கை
, சனி, 1 செப்டம்பர் 2018 (07:23 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த விமானம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அடுத்த 20 நொடிகளில் நொறுங்கியிருக்க வேண்டிய விமானம் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக விமானப் போக்குவரத்துக் கழக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி தனி விமானம் ஒன்றில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்டோபைலட் முறையில் இயங்கி வந்த அந்த விமானத்தை விமானி சாதுர்யமாக மேனுவல் முறைக்கு மாற்றினார். அவர் இன்னும் 20 நொடிகள் தாமதம் செய்திருந்தால் அந்த விமானம் செங்குத்தாக கீழே விழுந்து நொறுங்கியிருக்கும் என்று இதுகுறித்து விசாரணை செய்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து ராகுல்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்ப்பியது தற்போது தெரியவந்துள்ளது.

webdunia
மேலும் இந்த பயணத்தின்போது விமானத்தில் கோளாறு என்று தெரிந்தவுடன் ராகுல்காந்தி கைலாசத்தில் உள்ள மான்சரோவருக்கு வருவதாக வேண்டுதல் செய்து கொண்டதாகவும், அந்த வேண்டுதலை நிறைவேற்றவே தற்போது அவர் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிரியை ஏற்றுக்கொண்டால் தி.மு.க வலிமைபெறும்: நாஞ்சில் சம்பத்