Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மெகா திட்டத்தை முடுக்கி விட்ட அரசு!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மெகா திட்டத்தை முடுக்கி விட்ட அரசு!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
விரைவில் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 
 
தற்போது புத்தக வடிவிலான பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்டை அடுத்த ஆண்டு முதல் நாட்டில் அனைவருக்கும் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போது சோதனை முயற்சியாக முதலில் 20,000 அரசு அதிகாரிகள் மற்றும் தூதரகங்களில் பணிபுரிவோருக்கு இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி மற்றும் சென்னையில் பிரத்யேக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
விரைவில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் விநியோகம் செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும் வழக்கமாக பாஸ்போர்ட் வழங்கும் முறையும் பாதிக்காத வகையில் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்; இந்தியாவின் ஒற்றுமை வலுவானது! – பிரதமர் மோடி உரை!