சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

Mahendran
வியாழன், 11 டிசம்பர் 2025 (16:15 IST)
நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, "சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்" என்று குற்றஞ்சாட்டினார். இது அமித்ஷாவுக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
 
இது குறித்து இன்று பேசிய ராகுல் காந்தி, "விவாதத்தின் போது நான் குறுக்கிட்டதால் அமித்ஷா பதற்றம் அடைந்தார். நான் வெளிப்படையாக சவால் விடுத்தும், என்னுடைய குற்றச்சாட்டுகளை மறுக்க அமித்ஷாவிடம் ஆதாரங்களோ, பதில்களோ இல்லை" என்று கூறினார்.
 
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பேசும்போது ராகுல் வெளிநடப்பு செய்கிறார். உண்மையை கேட்க அவருக்கு வலிமை இல்லை. அமித் ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது" என்று பதிலடி கொடுத்தார். 
 
நாடாளுமன்ற மோதல் இப்போது இரு கட்சிகளின் தனிப்பட்ட மோதலாக மாறியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments