நாடாளுமன்ற மக்களவைக்குள் ஒரு எம்பி இ-சிகரெட் பயன்படுத்தியதாக இன்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யார் பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் பேசிய தாக்கூர், அந்த எம்பி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற விதிகளை மீறிய இந்த சம்பவத்தை அவைத் தலைவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதியான பதிலை கொடுத்தார். "சபைக்குள் எந்தவொரு உறுப்பினரும் புகைபிடிக்க அனுமதிக்கிறது என்று எந்த விதியோ அல்லது முன்னுதாரணமோ இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பது தெளிவாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.