Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கியெழுந்த மணிப்பூர் பெண்கள்! – குற்றவாளிகள் வீடுகளுக்கு தீ வைப்பு!

Advertiesment
Manipur
, ஞாயிறு, 23 ஜூலை 2023 (09:35 IST)
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த குற்றவாளிகள் வீட்டிற்கு பெண்கள் தீ வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.



மணிப்பூரில் இரண்டு சமூகத்தினர் இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில் கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் கலவரங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இரண்டு பழங்குடி பெண்கள் எதிர்தரப்பினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பேரில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது யும்லெப்ம நுங்கிதேய் என்ற 19 வயது இளைஞரும் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த குற்ற வழக்கில் கைதான ஹீராதாஸ் என்பவர் வீட்டை சில நாட்கள் முன்னதாக பெண்கள் பலர் சேர்ந்து தீ வைத்து எரித்தனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காங்க்புகி என்பவரது வீட்டையும் பெண்கள் பலர் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராக பெண்கள் திரண்டு வீட்டை எரிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த வாரம் வெளியாகிறது Chat GPT செயலி! – இனி கூகிள் கதி அவ்ளோதானா?