Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிச்சயிக்கப்பட்ட பையனின் கழுத்தை அறுத்தது ஏன்? ஆந்திரா புஷ்பா வாக்குமூலம்

Advertiesment
bride murder
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:35 IST)
நிச்சயிக்கப்பட்ட பையனின் கழுத்தை அறுத்தது ஏன்? ஆந்திரா புஷ்பா வாக்குமூலம்
ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பையனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற புஷ்பா என்ற பிஎச்டி மாணவி கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவருக்கும் இருதரப்பு பெரியவர்கள் திருமணம் நிச்சயித்தனர்.
 
 இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னர் மலை பகுதிக்கு சென்ற ராமகிருஷ்ணா மற்றும் புஷ்பா திடீரென ராமகிருஷ்ணாவின் கழுத்தை புஷ்ப கத்தியால் அறுத்ததால், ராமகிருஷ்ணா  உயிருக்கு போராடியுள்ளார் 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் புஷ்பாவை கைது செய்த போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் அவர் கூறியபோது, ‘நான் பெண் துறவியாக மாற விரும்பினேன் ஆனால் எனது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. எனவே நிச்சயிக்கப்பட்ட பையனை கொலை செய்து விட்டால் நான் திட்டமிட்டபடி துறவியாகலாம் என்று நினைத்து தான் கொலை செய்ய முயற்சித்தேன் என்று புஷ்பா வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓலா, உபேர் கட்டணங்கள் 14 சதவிகிதம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!