சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் 1,800 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. இதற்கிடையில், இந்த படத்தால் தான் மாணவர்கள் கெட்டுப் போயுள்ளனர் என பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அரசு பள்ளி தலைமை ஆசிரியை சமீபத்தில் நடந்த கலந்துரையாடலின் போது பேசும்போது, "அரசு பள்ளி மாணவர்களை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. நான் தலைமை ஆசிரியை ஆக இருக்கும் பள்ளியில் பல குழந்தைகள் புஷ்பா படத்தை பார்த்த பிறகே கெட்டுப் போயுள்ளனர். அந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
கேவலமான ஹேர் ஸ்டைல், ஆபாசமான உரையாடல்கள் போன்றவற்றை பார்த்து மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கும்போது, நான் தோல்வியடைந்தது போலவே தெரிகிறது," என்று தெரிவித்தார்.
சமீப காலமாக வெளிவரும் படங்களில் மாஸ் நடிகர்கள் கெட்டவர்களாகவே நடிப்பது அதிகரித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.