Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பப்ஜி கேம் - க்கு தடை வேண்டும் ... முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுவன் ...

Advertiesment
பப்ஜி கேம் - க்கு தடை வேண்டும் ... முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுவன் ...
, வியாழன், 31 ஜனவரி 2019 (14:17 IST)
இன்றைய  சிறுவர்கள் செல்போனில் ஆர்வத்துடன்  விளையாடும் விளையாடுதான் பப்ஜி கேம். இதை தடை செய்ய வேண்டுமென்று 11 வயது சிறுவன் ஒருவன் மகாராஷ்டிர மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளான்.
பொழுதுபோக்கு விளையாட்டு அம்சம் கொண்ட பப்ஜி கேம் தற்போது சிறுவர் முதல் முதியோர் வரை பலரையும் ஈர்த்துள்ளது.
 
இந்நிலையில் குழுவாக பேசிக்கொண்டு விளையாடும் இந்த டிரண்டான ப்ப்ஜிகேம் தற்போது குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இப்போது மகாராஷ்டிர மாநிலத்திலும் தடை விதிக்க வேண்டும் என்று 11 வயதே ஆன அஹத் நிஜான் என்ற மாணவன் அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளான்.
 
கடந்த 25 ஆம் தேதி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுகு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இந்த விளையாட்டை சில நாட்கள்  விளையாடியபோது அதில் எதிர் மறையான எண்ணங்கள் , வன்முறை, கொலை, கொடூரம்  போன்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக இருந்ததால் நான் இந்த விளையாட்டை விட்டுவிட்டேன். எனவே இதை தடை செய்ய வேண்டும்.
 
மேலும் இக்கடிதத்தை தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் , மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ் டே உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளான்.
 
இதுசம்பந்தமான நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளான். இதனால் சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை