காந்தி உருவபடத்தை அவமரியாதை செய்த பெண் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சக்குன் பாண்டே என்ற பெண் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதற்கிடையே காந்தி உருவப்படத்தை அவமரியாதை செய்த சக்குன் பாண்டே யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சக்குன் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை விட்டு நின்ற இவர் அகில பாரதிய ஹிந்து மகா சபாவின் நீதிபதியாக பதவி வகிக்கிறார்.
நேற்று இவர் செய்த செயலால் நாடெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. போலீஸார் பூஜா சாகுன் பாண்டே உட்பட 13 பேர்மீது வழக்குப்பதிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.