Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

இன்று ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

Siva

, புதன், 4 டிசம்பர் 2024 (16:12 IST)
இன்று மாலை 4:08 மணிக்கு ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் "ப்ரோமோ 3" என்ற செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4:08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட இருந்ததாகவும், இதற்கான கவுண்டவுன் தொடங்கியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்விசி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"ப்ரோமோ 3" செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கோளாறு தற்போது சரி செய்யப்படுவதாகவும், நாளை மாலை 4:12 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ  எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயல் பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு உதவ தயார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!