Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளியை நோக்கி ‘சுக்ரயான்-1’.. இஸ்ரோவின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்! - எப்போது தெரியுமா?

Shukrayan 1

Prasanth Karthick

, வியாழன், 3 அக்டோபர் 2024 (12:24 IST)

இதுவரை சந்திரன், சூரியன், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்பிய இஸ்ரோ அடுத்து வெள்ளி கிரகத்திற்கு விண்கலனை அனுப்ப உள்ளது.

 

 

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO - Indian Space Reaserch Organization) வல்லரசு நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுக்கு நிகரான அளவில் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பெரும் பாய்ச்சல்களை ஏற்படுத்தி வருகிறது. மிகவும் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ நிலைநிறுத்தியது உலக நாடுகளை பிரமிக்க செய்தது.

 

தொடர்ந்து சந்திரயான் 1 மற்றும் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல் 1’ விண்கலத்தை அனுப்பியது.

 

தொடர்ந்து இதன் அடுத்தக்கட்டமாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் முனைப்பில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. வெள்ளியை ஆய்வு செய்ய பூமியிலிருந்து வெள்ளிக்கு ‘சுக்ரயான் -1’ என்ற விண்கலத்தை தயார் செய்யும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.
 

 

இதுகுறித்து பேசிய இஸ்ரோ விஞ்ஞானிகள், வளிமண்டலம் மற்றும் புவியியல் ஆய்வுக்கான இந்தியாவின் வீனஸ் திட்டப்படி 2028ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி சுக்ரயான் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் கிரகங்களுக்கு இடையே பயணிக்கும் அவசியம் உள்ளதால் அதிக எடையை தாங்கி செல்லும் எல்விஎம்-3 ரக பாகுபலி ராக்கெட்டை பயன்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மார்ச் 29ல் புறப்படும் இந்த விண்கலம் 112 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 19ம் தேதியில் வெள்ளிக்கோளை சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழி உதவியாளர் தம்பி என கூறியவர் கொடுத்த வாக்குமூலம்.. என்ன சொல்லி இருக்கிறார்?