புயல் பாதிப்புக்கு உள்ளான தமிழகத்திற்கு உதவி செய்ய தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் வீடு இடிந்து ஏழு பேர் உயிரோடு புதைந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது எங்கள் எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில், கேரளா தனது அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறது. தமிழகத்திற்கு தேவையான எந்த உதவிகளை வழங்கவும் கேரளா அரசு தயாராக உள்ளது. ஒருங்கிணைந்து வெள்ள மீட்பு பணிகளை வென்று வருவோம்" என்று பதிவிட்டுள்ளார்.